மொழிப் பற்று

May 17, 2011 § 5 Comments


ஹக்ஸர் உயர்மட்டக் குழுவிலிருந்த போதுதான் இத்தகைய குழுக்களையும், கமிஷன்களையும் அரசாங்கம் ஏன் நியமிக்கிறது என்பது தெரிய வந்தது. ஓய்வு பெற்ற வி.வி.ஐ.பிக்களின் பொழுது போக்குக்காக.

ஹக்ஸர் அவ்வப்பொழுது சில பிரச்னைகளைப் பற்றி ராஜிவ் காந்திக்கு, அவருடைய அம்மாவின் நண்பர் என்ற முறையில் கடிதங்கள் எழுதுவது வழக்கம். அவரை ஒரு கமிட்டித் தலைவாராகப் போட்டுவிட்டால் கடிதங்கள் எழுத மாட்டாரென்ற நம்பிக்கையில் ஹக்ஸர் கமிட்டி உருவாகியது. கமிட்டியின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமென்ற அவசியமில்லை. இதனால்,இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க எனக்கு முதல் தடவையாக வாய்ப்பு ஏற்பட்டது.

இந்திரா காந்தி பார்லிமெண் டில் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுக்கும் அங்கத்தினர்களை அயல்நாட்டு தூது கோஷ்டி அங்கத்தினர்களாக அனுப்பிவிடுவது வழக்கம்.

நான்  வார்ஸாவில் இருந்தபோது, அயல்நாட்டு இந்தியத் தூதுவரங்கங்களில் தேசீய மொழியாகிய ஹிந்தி எப்படி நிர்வாக ரீதியாக செயலாக்கம் பெறுகிறது என்பதை ஆராய ஒரு பார்லிமெண் ட் குழுவை  இந்திரா காந்தி அனுப்பினார்.  கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் ஒரு குழு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு குழு என்ற ரீதியில் அனுப்பப் பட்டிருந்தன.

எனக்கு என்ன அதிர்ச்சி என்றால், வார்ஸாவுக்கு வந்த குழுவில் தி.மு.க எம்.பிக்களும்,அ.தி.மு.க எம்.பிக்களும் இருந்தனர் என்பதுதான்.

இந்தியத் தூதுவர் அவர்களைச் சந்திக்க ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். நான் ஒரு தி.மு.க எம்.பியைக் கேட்டேன்: ‘ ஹிந்தி மட்டுந்தான் தேசிய மொழி என்பதை உங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படி இந்தக் குழுவுடன் வர உங்கள் கட்சி சம்மதித்தது?’

‘அ.தி.மு.க. காரர்கள் வருகிறார்கள், நாங்கள் வ்ரக் கூடாதா?’

‘என் கேள்வி உங்கள் இரண்டு கட்சிகளுக்குந்தான்?’

‘ முதலில் அவர்களைக் கேளுங்கள்.அப்புறம் நான் பதில் சொல்லுகிறேன். பாரிஸ், ரோம் என்று இந்த மாதிரி இடங்களுக்கு அனுப்புவார்கள் என்று பார்த்தால், வார்ஸா, பெல்கிரேட், மாஸ்கோ என்று எங்கள் கட்சிக்காரர்களை அனுப்பியிருக்கிறார்கள். இங்கெல்லாம், காஸினோ, நைட் கிளப் என்று ஒன்றும் கிடையாதாமே?ரகசியமாய் நடைபெறுகின்றன என்கிறார்களே, உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’

‘ போலிஷ் மக்களுக்கும் தமிழர்களைப் போல் மொழிப் பற்று அதிகம். 120 ஆண்டுகள் போலந்து,  ஐரோப்பிய வரைபடத்தில் இல்லாவிட்டாலும், போலிஷ் மக்கள்  தங்கள் கலாசார அடையாளத்தை மொழிமூலமாகத்தான் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். போலிஷ் மொழி அழியாமலிருந்திருக்கிறது.’ என்றேன் நான்.

அவர் என்னைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிற்கு, கையிலிருந்த விஸ்கியைச் சுவைத்துக் கொண்டே கேட்டார்: ‘இங்கெல்லாம் வோட்காதான் கிடைக்கும் என்றார்கள். இது உயர்ந்த ரக ஸ்காட்ச்சாக இருக்கிறதே,  தூதுவரகங்களுக்கு ‘ஸ்பெஷல் சப்ளையா?’

Advertisements

§ 5 Responses to மொழிப் பற்று

 • Madhusoodhanan says:

  The posts give proper perspective of the governments'(state/central) efforts for developing Arts and Literature.
  Very happy to read through your blog.

 • ஜெகன் says:

  வலைப்பதிவில் உங்கள் எழுத்துகளை படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

 • suresh says:

  Eventhough Charu used to mentioned your name, it is first time i am reading your writings.

 • suresh says:

  Good and Interesting.

 • sathianarayanan says:

  //Eventhough Charu used to mentioned your name, it is first time i am reading your //

  என்ன கர்மம்டா சாமி!
  வடிவேலு வந்து கலைஞரை அறிமுகப்படித்தியது போல.
  சுரேஷ் அவர்களே சாரு சொல்லி இ.பா பற்றி தெரியும் என்பது உங்கள் அறியாமையை மட்டுமல்ல அலட்சியத்தையும் காட்டுகிறது.
  நியாயப்படிக்கு நீங்கள் இந்த வரிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading மொழிப் பற்று at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: