மொழிப் பற்று

May 16, 2011 § 8 Comments


நம்முடைய கலாசார நிறுவனங்கள்( சாஹித்ய அகெதமி, சங்கீத நாடக அகெதமி, லலித் கலா அகெதமி, தேசிய நாடகப் பள்ளி போன்றவை) செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அவை மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் செய்ய  மத்ய அரசாங்கம் 1988ல் அமரர் பி.என் ஹஸ்கர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்தது. அதில் நானும் ஓர் உறுப்பினர். அப்பொழுது எனக்குப் பல சுவாரஸ்யமான அநுபவங்கள் ஏற்பட்டன.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் தலைநகருக்கும் சென்று அம்மாநிலத்தில் வெவ்வேறு  கலைத்துறைகளில் இருக்கும் கலைஞர்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக் களைக் கேட்க வேண்டும். மாநில முதல அமைச்சர் சந்திப்பும் எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

ஹக்ஸர் ஆச்சர்யமான மனிதர். அவ்ருக்குக் கண் பார்வை இல்லை என்பத்ற்கு ஈடு செய்வது போல் அவ்ர் நினைவாற்றல் அமைந்திருந்தது. ஒரு நாளைக்கு நாங்கள் பத்துப் பேரைச் சந்த்திதிருந்தால், அந்த ஐந்து மணி நேரத்தில் யார்யார் என்ன சொன்னார்கள் என்று தொகுத்து அவரால் கூறமுடியும்.

ஹைதராபாதில்  அப்பொழுது ஆந்திர முதலமைச்சாரக இருந்த என்.டி. ராமராவ் எங்களை அவர் வீட்டுக்குக் காலை சிற்றுண்டிச் சாப்பிட அழைத்திருந்தார். எட்டரை மணிக்கு வரும்படியாகச் சொல்லியிர்ந்தார். ஹக்ஸர், அல்காஸி, குலாம் ஷேக்(ஓவியக் கலைஞர்) டாக்டர் பிரேம லதா ஷர்மா( இசைப் பேராசிரியர்) முன்னாள் ஆட்சிதுறை செயலர் கே.வி.ராமநாதன்,  நான், எல்லோரும்  முதல் அமைச்சர் வீட்டுக்கு எட்டு மணிக்கே சென்று விட்டோம்.

பெரிய ஹால். நீண்ட மேஜை. சுமார் நூறு பேர் உட்கர்ந்திருந்தார்க்ள். யாரும் பேசவில்லை. அங்கு நிலவிய அமைதியைத் தொட்டுப் பார்த்து விட முடியும் போல் தோன்றியது.

பத்தடி உயரத்துக்கு, வண்ணத்தில் வரையப்பட்ட ஓர் ஆந்திரப் பெண்மணியின்  உருவப் படம் சுவரில் தொங்கியது. பத்தடி நீளத்துக்கு சந்தன மாலை அப்படத்தை அலங்கரித்தது.

மணி எட்டே முக்கால்.  முதல் அமைச்சர் வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. அங்கிருந்த எல்லாருமே அவர் வருகைக்காகக் காத்திருப்பது போல் பட்டது.

ஹக்ஸர் என்னிடம் மிக மிருதுவான குரலில் கேட்டார்: ‘ என்ன நடந்து கொண்டிருக்கிறது?’

‘காத்த்துக் கொண்டிருக்கிறோம்..’ என்றேன்

‘கோடோ?’ (Godot) என்றார் ஹக்ஸர்.

அப்பொழுது  திடீரென்று ஹாலில் மேஜை அருகே உட்கர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள். அவர்கள் பார்வை வாசல் பக்கத்தை ஒட்டி இருந்த மாடிப் படிகளை நோக்கி நிலை குத்தி நின்றது. முகங்க்ளில் பக்திப் பரவசம்.

நாங்க்ள் உள்சுவரை ஒட்டி ஓரமாக நாற்காலிகளில் உட்கர்ந்திருந்ததால்  மாடியின் கீழ்ப் படிகள்தாம் எங்கள் கண்ணுக்குப் பட்டன. யாரோ புடை சூழ வருவதை உணர்ந்தோம்.

ஆஜானுபாவராகக் காவி உடையில் கண்களிலும் இதழோரங்களிலும் புன்னகையைத் தவழ விட்டுக் கொண்டு வந்து நின்றார் என்.டி.ஆர்.

திடீரென்று அங்கு முளைத்தார் ஆந்திர அரசாங்கத்தின் பண்பாட்டுத் துறைச் செயலர்.

எங்களை முதல் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார். என்.டி.ஆர் புன்னகையுடன் கைக் கூப்பினார்.

‘ஹக்ஸர் சா(ஹ்)ப், I know you are an outstanding man’  என்று  க்ம்பீரமான குரலில் சொல்லிக் கொண்டே எங்களைப் பார்த்தார் என்.டி.ஆர்.

‘தாங்க் யூ.’ என்று சொல்லி விட்டு உட்காரப் போனார் ஹக்ஸர்.

‘வருங்கள். சாப்பிடப் போவோம்..’ என்று சொல்லிக்க் கொண்டே முன் சென்றார் முதல் அமைச்சர்.

“இதுதான் காலம்சென்ற என் மனைவி. இவளை வணங்கிவிட்டுத்தான் என் காலைப் பணிகளைத் தொடங்குவேன்’ என்று சொல்லிக் கொண்டே அவ்வண்ணப் படத்தெதிரே மெய்ம்மறந்து சில விநாடிகள் நின்றார் அவர்.

‘A pity!!. எனக்குப் பார்வை இல்லை’ என்றார் ஹக்ஸர்.

‘அகக்கண்ணால் பாருங்கள், தெரியும்’ என்றார் என்.டி.ஆர் உரக்க சிரித்துக் கொண்டே.

ஹக்ஸர் ஒன்றும் சொல்லவில்லை.

சிற்றுண்டி சாப்பிட உட்கர்ர்ந்தோம். அப்பொழுது அங்கு வந்த ஒருவரை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்: ‘ இவர்தாம் டாக்டர் நாரயணராவ்காரு. தெலுகு யுனிவெஸிட்டி துணை வேந்தர். கவிஞர். இவர் என் படம் ‘குலேபகாவலிக்கு’ப் பாட்டு எழுதினார். ஒவ்வொரு பாட்டும் ‘ஹிட்’.  இதற்காகவே இவரைத் துணை வேந்தராக ஆக்கி விட்டேன்.’

ஹக்ஸருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பேசாமலிருந்தார்.

திடீரென்று என் பக்கம் திரும்பித் தமிழில் கேட்டார் என்.டி.ஆர். ‘ நீங்கள் தமிழ்நாடா?’

‘ஆமாம்’

‘எம்.ஜிஆர் ‘குலேப்காவலி’ பார்த்திருக்கிறீர்களா?’

‘இல்லை.’

‘Great soul!’ என்று சொல்லிவிட்டு சில வினாடிகள் நினைவுகளில் ஆழ்ந்தார். அவர் எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டாரா, என்னைக் குறிப்பிட்டாரா என்று எனக்கு விளங்கவில்லை.

சிற்றுண்டி முடிந்தது.

ஹாலுக்கு வந்ததும் முதல்வர் சொன்னார்: ‘ உங்களுக்கு நினைவுப் பரிசு கொடுக்க் விரும்புகிறேன். இது எனக்குப் பெருமையாக இருக்கும்’.

வண்ணக் காகிதத்தில் gift pack செய்யப்பட்டு வைத்திருந்த ஆறு பெரிய பொட்டலங்கள் எங்கள் கண்ணுக்குப் பட்டன.

என்னவாக இருக்கும்?

காரில் திரும்பிப் போய் உட்கார்ந்து பொட்டலங்களைப் பிரித்தோம்..’ ஸஸ்பென்ஸ்’ தீர்ந்தது!

எல்லாமே புத்தங்கள்! என்.டி.ஆர் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுப்புக்கள்!

Advertisements

§ 8 Responses to மொழிப் பற்று

 • ஒருவன் says:

  இ.பா சார்… நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். நீங்கள் வலைப்பதிவு எழுத முன்வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் பதிவுகள் சுவையாக உள்ளன. தொடர்ந்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 • Prakash says:

  சார், நிஜமாவே குலேபகாவலி பாத்ததில்லையா இல்ல சும்மா போட்டு வாங்கினீங்களா?

 • ramji_yahoo says:

  சுவாரஸ்யமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்
  திரைப் பாடல்கள் சிறப்பாக எழுதியதால் துணை வேந்தர் பதவி, என்ன சொல்ல

 • […] என் மதிப்புக்குரிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுத ஆரம்பித்த… சில வரிகள். இந்த வயதில் இத்தனைக் […]

 • suresh says:

  excellent.

 • Ramanujam says:

  அற்புதமான பதிவு. சுவாரஸ்யமான நடை.தொடர்ந்து இணையத்தில் எழுதுங்கள்

  ராமானுஜம்

 • இபா சார்,
  உங்களைப் போல சீனியர்கள் பதிவுலகில் செயல்பட முன் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது…

  பாரா சொல்லி நீங்கள் வலையிலும் எழுதுவது தெரிந்தது…

  உங்களது வாழ்வில் பல சுவையான அனுபவங்கள் வலை வாசகர்களுக்குக் கிடைப்பது ஒரு நல் வாய்ப்பு.

  தவறாது தொடருங்கள்.

  நன்றி பல.

 • babu says:

  பாராதான் தன் வலையில் தங்களின் பதிவைப் பற்றி குறிப்பிட்டு‍ தொடர்பு முகவரியையும் கொடுத்திருந்தார். எனக்கு‍ பிடித்த எழுத்தாளரின் அனுபவத்தை படிப்பது‍ பேருவகையாக உள்ளது‍.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading மொழிப் பற்று at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: