கருணாநிதி ஜெயலலிதாவுக்குக் கொடுத்த பரிசு

May 13, 2011 § 10 Comments


ஐ.பி.எல் 4 ஐ க்காட்டிலும் இன்று காலை தொலைக் காட்சி ஊடகங்களில் காட்டப்பட்ட தேர்தல் முடிவுகள் அதிகப் பார்வையாளர்களைப் பெற்றிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். காரணம், அரசியல் விளையாட்டுகள், கிரிக்கெட்டைக் காட்டிலும் சுவரஸ்யமானவை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தேர்தல் முடிவுகள் ‘ஒரு பக்க விளையாட்டாகவே’ ( one-sided game)  முடிந்து விட்டது.செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி 234 இடங்களில், முக்கால்வாசி இடங்களில் அமோக வெற்றி அடைந்துவிட்டது. தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்குமிடையே நடந்த இப்போட்டி, கானடா கிரிக்கெட் அணிக்கும்,  இன்றைய இ ந்திய கிரிக்கெட் அணிக்குமிடையே நிகழும் போட்டியைப் போலிருந்தது.

செல்வி ஜெயலிதா இம் மாபெரும் வெற்றிக்கு யாருக்கு நன்றி கூற வேண்டும்?  ‘பண நாயகம், ல்ஞ்ச ஊழல் ஆகியவற்றை முறியடித்த தமிழ் மக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்’  என்று அவர் சொன்னாலும், அவ்ர் முக்கியமாக திரு. கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கூறியிருக்க வேண்டும்.

கம்ப ராமாயணத்தில் ( திரு. கருணாநிதி மன்னிப்பாராக!) ஒரு நிகழ்ச்சி வருகிறது. இந்திரசித்து நிகும்பலை யாகம் செய்யத் தொடங்குகிறான். அந்த யாகம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது.இது அறிந்து, வீடணன் இராமனுக்கு இச்செய்தியைச் சொல்ல, இலக்குவன் இந்திரசித்தும் இடம் நாடி, யாகத்தைக் கலைத்து விடுகிறான். பிறகு, இளவல், இந்திரசித்து தலையை இராமனிடம் சம்ர்ப்பிக்க, இராமன் கூறுகின்றான் ”இவ்வெற்றிக்குக் காரணம், நீயோ அல்லது உன்னுடன் துணைக்கு நின்று போராடிய அநுமனோ அல்லது எந்த தெய்வமோ இல்லை.இது வீடணன்  தந்த வெற்றி ‘.

அது போல், தமிழ் நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளாகக் குடும்ப ஆட்சியும் அதனோடு இணைந்த வர்லாறு காணாத லஞ்ச ஊழலும் நடைபெறாமலிருந்திருந்தால், செல்வி.ஜெயலலிதாவால் இது போன்ற  ஒரு மாபெரும் வெற்றியை அடைந்திருக்க முடியுமா? இதற்காகவாவது அவ்ர் திரு.கருணநிதிக்கும் அவ்ர் குடும்பதினருக்கும் நன்றி கூற வேண்டும்.எதற்குக் கருணாநிதி மன்னிப்பாராக என்று சொன்னேன் என்பது புரிகிறதா? ஒன்று, அவருக்குப் பிடிக்காத இராமாயணத்தினின்றும் மெற்கோள் காட்டியது, இரண்டு, அவரைவீடணனோடு  இணைத்துப் பேசுவது.

செல்வி.ஜெயலலிதாவின் வெற்றியின் பிரும்மாண்டத்தைப் பார்க்கும்போது, தமிழ் மக்களின் கோபம் தான் விசுவரூபம் எடுத்துத் தெரிகிறது. 1977ல், சரித்திரப் புகழ் பெற்ற ‘எமெர்ஜென்ஸி’க்குப் பிறகு, இந்திராவின் மீது இந்திய மக்கள் தங்கள் சினத்தை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தெரிவித்தது போல தமிழ் மக்களின் கோபம் இத்தேர்தல் முடிவ்களில் வெளிப்படையாகத் தெரிகிறது.இப்பொழுது புரிகிறதா, ஜனநாயகம் சர்வாதிகாரத்தைக் காட்டிலும் எச்சுழ்நிலையிலும் சிறந்ததென்று?

திரு. கருணாநிதி, தினம், ஒளிவு மறைவுவின்றி அந்தரங்க ‘டைரி’ எழுதும் பழக்கம் உடையவராக இருந்தால், அவ்ர் இவ்வாறுத்தான் எழுதியிருப்பார்| ‘ இத்தேர்தல் முடிவுகள் என்னை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்.உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு எனக்குப் பிறகு முதலமைச்சர் யார், அழகிரியா, ஸ்டாலினா என்ற கேள்வி எழுவதற்கு இடமேயில்லை!’

Advertisements

§ 10 Responses to கருணாநிதி ஜெயலலிதாவுக்குக் கொடுத்த பரிசு

 • ||இவ்வாறுத்தான் எழுதியிருப்பார்| ‘ இத்தேர்தல் முடிவுகள் என்னை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்.உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு எனக்குப் பிறகு முதலமைச்சர் யார், அழகிரியா, ஸ்டாலினா என்ற கேள்வி எழுவதற்கு இடமேயில்லை!’||

  வா.வி.சி.(வாய் விட்டுச் சிரித்தேன்!)

  இ.பா டச்..
  அவருக்குத் தன் தவறுகளை அசை போட்டுப் பார்க்க 5 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது..
  ஆனால் திருந்தி திரும்ப வர காலம் டூ லேட்.

  லட்சிய வாதியாக முரசறைந்து கொண்டு வாழ்வைத் துவங்கிய ஒருவர் பக்காவான சுயநல வாதியாக வீழ்ந்த அவலக் கதை இந்த தேர்தலின் ஹை லைட்..

 • Kangal-Irandaal says:

  இ.பா Sir, உங்களை இங்கே பார்பதற்கு சந்தோஷம்.

  ஜெயலலிதாவுக்கு, சரியாகப் பொருந்தும் “ஜ”, இந்திரசித்துக்கு மட்டும் பொருந்தாதா?

  எப்படி இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, கையில் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள், அந்த அதிகாரத்துக்குரிய மரியாதை தந்தால், வானமும் வசப்படும் என்பதற்கான சான்று இது. Hats off to election commission.

 • Balaji says:

  //இன்னும் ஐந்தாண்டுகளுக்கு எனக்குப் பிறகு முதலமைச்சர் யார், அழகிரியா, ஸ்டாலினா என்ற கேள்வி எழுவதற்கு இடமேயில்லை!’// அவ்வளவு சீக்கிரமா இது நடந்துடும்னு நினைக்கிறீர்களா. இதுன்னா….அதை. என்ன ஒண்ணு. இந்த அஞ்சு வருஷத்துல அது நடந்தால் பீச்சாங்கரையோரமா ஒதுங்கியிருக்கிறார், பயில்கிறார், துயில்கிறார்ன்னெல்லாம் போட முடியாது.

 • Karthik says:

  //அவரைவீடணனோடு இணைத்துப் பேசுவது.//

  இதற்க்கு வீடணன் அல்லவா மன்னிக்கவேண்டும்

 • virutcham says:

  அவரே அடிக்கடி ராமாயணத்தில் இருந்து தான் மேற்கோள் காட்டுகிறார்.

 • babu says:

  தேர்தல் முடிவு பற்றி இதுவரை பலரின் கட்டுரையை படித்திருந்தாலும், தனிப்பட்ட ஒரு‍ சிறந்த நடையில் மீண்டும் அதே செய்தியை ராமாயண உதாரணத்துடன் படித்தது‍ நெகிழ்வாகவும், உற்சாகமாகவும் இருந்தது. கலைஞரின் டைரிக் குறிப்பு சூப்பர்.

 • சார், உங்கள் வாசகன்/ரசிகன் நான். வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  கடைசி வரியைப் படித்தவுடன் தோன்றியது இதன் தலைப்பு “ஜெயலலிதா கருணாநிதிக்குக் கொடுத்த பரிசு” என்று இருந்திருக்க வேண்டும்.

  உருளுடைச் சகடம் பூண்டு, உடையவன் உய்த்த காரேறு அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்

  இதுவும் சூழ்நிலைக்கு சரியான கம்பராமாயணப் பாடலாக இருந்திருக்கும், கருணாநிதி பார்வையில்..

 • மக்களின் கோபத்தால் வீழ்ந்தவர்களை உதாரணம் காட்ட நீங்கள் எமர்ஜென்ஸி இந்திரா வரையில் போயிருக்க வேண்டியதில்லை.

  1991 – 96 காலகட்டத்தில் ஆணவ ஆட்சி செய்து, 1996-ல் வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்ற ஜெயலலிதாவே நல்ல உதாரணமாக இருக்கிறாரே.

 • Ravi says:

  தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், திமுக, அதிமுக என மாறி மாறித் தான் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதில் தண்டனை…அல்லது பரிசு எங்கு வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கருணாநிதி ஜெயலலிதாவுக்குக் கொடுத்த பரிசு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: