‘ஆண்பிள்ளைச் சோறாள்வி’

May 11, 2011 § 5 Comments


ஆங்கிலம் ஓர் உலக மொழியாக ஆனதற்குக் காரணம் அது எங்கெங்கெல்லாம் ஆட்சி புரிந்தததோ, அந்தந்த நாட்டுக் கனி வளங்களை மட்டும் கொள்ளை அடிக்கவில்லை, அந்தந்த நாட்டு மொழிச் சொற்களையும் அபகரித்து ,  தன் வீச்சையும் பரப்பையும் அதிகரித்திருக்கிறது. பிற மொழிச் சொற்களைத் தமிழ் மொழியின்  மேதைமைக்கேற்ப(genius of the Tamil Language) பிற மொழிச் சொற்களைத் தவிர்க்க முடியாத இடங்களில் மொழி ஆக்கம் செய்தோ அல்லது மாற்றி அமைத்துக் கொள்வதில் என்ன தவறு? தமிழில் தற்சமம், தற்பவ்ம் என்று எதற்காக வரையறை செய்திருக்கிறார்கள்? கம்பனைப் படித்தால்தான் இது புரியும். ‘கலைக்கோட்டு மாமுனிவன்’  யார் தெரியுமா? ரிஸ்யசிங்கர். லக்ஷ்மணன் -இலக்குவன். ஏன் மணிமேகலையிலேயே, ‘ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளாதலின்’ என்று வருகிறது. ‘ஏது’ என்பது ‘ஹேது’வின் மறு தோற்றம்.

வைணவப் பிரபந்தங்களுக்கு உரை எழுதியவர்கள் சம்ஸ்கிருததிலிருந்துமொழி ஆக்கம் செய்ததோடு மட்டுமல்லாம்ல், பல்புதியதமிழ்ச்சொற்களையும்உருவாக்கியிருக்கிறார்கள்.’கண்ணெச்சில் வாராமலிருக்க’ என்று ஈட்டில் வருகிறது. ‘கண்ணெச்சில்’ என்றால் என்ன பொருள் தெரியுமா? ‘திருஷ்டி’.

‘ஆண்பிள்ளைச் சோறாள்வி’ என்ற சொல் ஒன்றைச் சிருஷ்டிதிருக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.’ஆண்பிள்ளைச் சோறாள்வியை  ஸ்த்ரி என்று தொடர்ந்து திரிவாரைப் போல்’ என்கிறார் அவர். இதற்கு என்ன அர்த்தம்? அந்தக்காலத்தில் சோற்றை நிர்வாகம் செய்கிறவள் யார்? பெண். (பெண்ணியல் வாதிகள் மன்னிக்கவும்)ஆண்பிள்ளையாக இருந்தாலும், பெண் வேடம் (மோகினி) தரித்து  தேவர்களுக்கும் ‘உப்புச் சாறு’ என்கிற அமிர்தத்தை (கடலிலிருந்து வந்ததல்லவா? ‘உப்புச் சாறு’ என்பதும் வியாக்கியானச் சொல்) பகிந்ததளிக்க வந்தவர் யார்? திருமால். அசுரர்களும் தேவர்களும் மோகினி வேடத்திலிருந்த திருமாலை பெண்ணென்று நினைத்து மோகம் கொண்டு  தொடர்ந்து திரிகிறார்கள். திருமாலை ‘ஆண்பிள்ளைச் சோறாள்வி’ (சோற்றை ஆள்பவள்) என்கிறார்  பெரியவாச்சான் பிள்ளை.

‘இராமாறு நாயகன்’ என்றால் தெரியுமா? ‘இரவுதோறும் ரோமியோ’ வாக இருப்பவர்கள்! நம்பிள்ளை ஆளும் சொல் இது!

Advertisements

§ 5 Responses to ‘ஆண்பிள்ளைச் சோறாள்வி’

 • Ramanujam says:

  ஆஹா ! உப்புச்சாறு என்று எங்கள் வீட்டில் செய்யும் குழம்பு வகையின் பெயர்க்காரணம் இன்று தான் அறிந்து கொண்டேன்.நன்றி.வைணவர்களுக்கு எல்லாம் அமுது தான்
  கண்ணமுது,சாற்றமுது என்று.
  அன்புடன்
  Dr.ஜி.ராமானுஜம்

 • ||ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளாதலின்’ என்று வருகிறது. ‘ஏது’ என்பது ‘ஹேது’வின் மறு தோற்றம்.||

  ஹேது என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?

  ஏதிலார் குற்றம் போல் என்ற பிரயோகம் நீங்கள் சொல்லும் பொருளுக்கு மாறி வரும் போல் இருக்கிறதே…

  • ஹேது’ என்றால் ‘காரணம்’ ‘ஏதிலன்’ என்றால் ‘மற்றவன்’ ‘அந்நியன்’. இர்ணும் வெவேறான சொற்கள்.
   பௌத்தரும் சமணரும் ‘காரண-காரியமாக்’ க் கூற்ப்படும் நல்வினை, தீவினைகளில் நம்பிக்கைக் கொண்டவர்கள். மணிமேகலை புது மலர் கொண்டுவருவதற்காக மலர் வனம் போவதில்தான் அவளுடைய எதிர்காலம் அமைய இருக்கிறது. இதைத்தான்’ஏது நிகழ்ச்சி’ என்கிறார் சாத்தனார். ‘ஏது’ காரணம் . ‘நிகழ்ச்சி’ ‘காரியம்’. Hegelian Dialectics.
   ‘ஏதிலார்’ என்றால் ‘பகைவர்’ என்ற பொருளும்முண் டு. ‘Hell is the other man’என்றார் ஸாத்ரே.
   ‘ஏதில ஏதிலார் நூல்’ என்பது குறள். ஆட்சியாளனுக்குக் காமத்தால் வரும் தன் பலஹீனங்களை பகைவர் அறியாமல் நிறைவேற்றிக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவனுடைய இப்பலஹீனங்கள் வாயிலாகவே அவன் மீது வெற்றி கொள்ள பகைவர்களால் முடியும் என்கிறது குறள்.
   Look at the amazing practical wisdom of Valluvar! ‘ஏதிலார்’ என்றால், ‘பரத்தையர்’ என்ற பொருளில் ‘கலித்தொகையில்’ வர்கிறது.

 • Hari Krishnan says:

  //கலைக்கோட்டு மாமுனிவன்’ யார் தெரியுமா? ரிஸ்யசிங்கர்//

  மன்னிக்கவும். ரிஷ்யஸ்ருங்கர். கலைக்கோட்டு முனிவன் என்று மட்டும் கம்பன் மொழிபெயர்க்கவில்லை. பின்வருமாறும் சொல்லியுள்ளான்:

  இரலை நல் சிருங்கமா இறைவன் தாள் தொழா…..
  ———–

  எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை
  தனைச் சொலத் தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து
  (திரு அவதாரப் படலம்)

  பெரியவர்கள் எழுதுவதில் சிறு தட்டுப் பிழைகள் நேர்ந்தாலும், அது அப்படியே தவறான வடிவத்திலேயே பெரும் புழக்கத்தைப் பெறும் என்பதால் சுட்ட நேர்ந்தது. மீ்ண்டும் மன்னிக்கவும்.

 • Balaji says:

  இதேப்போல் இன்னுமொரு சொல் `இராமடம் மூட்டுவார் போலே`. மகன் தாய், தந்தையிடம் கோபித்துக் கொண்டு சத்திரத்தில் போய் தங்குகிறான். இரவு நேரமாகிறது தாய்க்கு கவலை மகன் பசி பொறுக்க மாட்டானென்று. உணவை எடுத்துக் கொண்டு சத்திரத்து முதாலாளியிடம் கொடுத்து மகனுக்கு கொடுத்து, அவன் சாப்பிடுவதைப் பார்த்து இன்புறுகிறார். இதேப்போல் பல சொற்க்கள் பெரியவாச்சான் பிள்ளை பிரயோகப்படுத்தியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘ஆண்பிள்ளைச் சோறாள்வி’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: