தமிழ் வாழ்க!

May 10, 2011 § 4 Comments


நேற்று +2 முடிவுகள் வெளிவந்தன.சன் தொலைக் காட்சியில் அறிஞர்கள் ஆலோசனை வழங்கினர். ஒரு பெண் கேட்டாள்:’ நான் சுமாராகதான் மதிப்பெண் வாங்கியிருக்கிறேன்.52%   எனக்கு பொறியியல் கிடைக்குமா?’  தமிழ் மீது ஆணையிட்டு அரியணையேறிருக்கும் அரசாங்கத்தின் ஆஸ்தான் தொல்லைக் காட்சி அறிஞர் பதில்: ‘ மதிப்பெண் குறைவாக இருந்தால் அறிவுசார் துறைகளுக்கு நீங்கள் போக வேண்டாம். பி.ஏ.தமிழ் படியுங்கள்’

ஆலோசனை சொன்ன அவர்மீது தப்பில்லை. தமிழ் கற்பது ப்ற்றி இதுதான் பரவலான அபிப்பிராயம். நான் எம்.ஏ தமிழ் படிக்கச் சேர்ந்தபோது (1950) தமிழ்ப் பேராசிரியர் டாக்டர்.ஏ.சி.செட்டியார் என்னிடம் கேட்டார்: ‘ உனக்கு பி.ஏவில்  ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண். எதற்குத்  தமிழ் ஏம்.ஏ. படிக்க விரும்புகிறாய்?’

அதாவதும் எந்தப் படிப்புக்கும் தகுதி இல்லாதவர்கள்தாம்  தமிழ் படிக்க வேண்டும் என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் நியதியாக இருந்து வருகிறது. தமிழ் அரசியல் கோஷம் என்பது வேறு விஷயம். செம்மொழிக் காமதேனு பால் மழை பொழிகிறது  அரசாங்க முத்திரை பெற்ற தமிழ்ப் பண்டிதர்கள் காட்டில்!

Advertisements

§ 4 Responses to தமிழ் வாழ்க!

 • para says:

  sir, perfect. கட்டுரைகளுக்குத் தலைப்பு கொடுங்கள். என்ன கேடகரியில் அவை எழுதப்படுகின்றன என்பதை பப்ளிஷ் செய்யுமுன் வலப்புறம் உள்ள டிராப் டவுன் மெனுவில் செலக்ட் செய்துவிட்டீர்களென்றால் [புதிய கேடகரிகளையும் சேர்க்கலாம்] தொகுப்பு எளிதாக இருக்கும்.

 • Kangal-Irandaal says:

  இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், நம் சமுதாயம் படிப்புடன், வேலைவாய்ப்பை மட்டுமே தொடர்புபடுத்துவதால் தான். என்னைப் பொறுத்தவரை, “கட்டாயம் தமிழை மட்டும்” படிக்காமல், “தமிழையும் கட்டாயம்” படித்தால் போதுமானது. Another reason IMHO is, we failed to market the tamil language, the way it should have been done and we had, in the past let some group of people to use Tamil for lot of personal agendas and not in the interest of the language.

  ஆனால் கடந்த 7,8 வருடங்களாக இந்த “tamil as a under-recognized course” என்கிற opinion மாறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் எழுதப்படும் so many blogs itself is a good proof for this.

 • virutcham says:

  இனி வரும் காலங்களை நகர்ப்புறங்களில் மாணவர்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் கூட தமிழை பாடமாக எடுப்பார்களா சந்தேகம் தான். பள்ளிப் பாடத்தில் தமிழை இன்னும் எளிமாக்க வேண்டும். எவ்வளவு கேள்விகளுக்கு பதில் படித்து எழுத வேண்டியிருக்கிறது. மொழி மேல் ஆர்வம் எப்படி வரும் ?
  தமிழ் படித்தால் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு பாடங்களை கல்லூரிகள் அறிமுகப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்த வேண்டும்.
  என் மகனுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் அனுபவம் எனக்கு எப்போதுமே சுமுகமானதாக இருந்ததில்லை.
  அந்த தொல்லை அனுபவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.
  http://wp.me/p12Xc3-7A

 • Dr Robert B Grubh says:

  நமது தமிழ் மொழியின் தொடர்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் பல உண்மைகளை – நீங்கள் கூறுபவற்றையும் சேர்த்து – சுட்டிக்காட்டுவதற்காக தமிழர் அனைவரும் பயனடையும் முறையில், ஒரு நூலை எழுதியுள்ளேன். இது விரைவில் வெளிவரும்.

  இந்நூலைப்பற்றி புகழ்வாய்ந்த எழுத்தாளர் பொன்னீலன் கூறுவதாவது: “பறவைகளையும் சுற்றுச்சூழலையும் பேணும் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஓரறிஞர், தாய் மொழியின் வளர்ச்சியில் இவ்வளவு அக்கறை காட்டி, இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது, தமிழுக்குக்கிடைத்த பெரும் பேறு. அனைவருக்கும் புரியும்படி எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள ஆழமான இந்நூலில் ஆசிரியர் தந்திருக்கும் எல்லா கருத்துகளும் அறிஞர், ஆட்சியாளர் மற்றும் மக்கள் மட்டத்தில் விரிவாகவும், ஆழமாகவும் விவாதிக்கப்பட வேண்டியவை. இந்த விவாதங்களின் முடிவு, தமிழ் மொழியை நிச்சயமாக கட்டவிழ்த்து பறக்கச் செய்யும்.”

  ஆனந்த விகடனின் முன்னாள் தலைமைப்பதிப்பாசிரியர், எஸ். பாலசுப்பிரமணியன் இந்த நூலைப்பற்றி கூறுவதாவது: “தமிழுடன் பெருமளவு தொடர்புள்ள மொழி வல்லுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடகர்கள், ஊடகங்களில் பணி புரிவோர், பொதுமக்கள், மற்றும் தமிழ் மொழியின் மேம்பாட்டில் பெருமளவு பொறுப்புள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்த நூல் எட்டவேண்டும் என்பது எனது பேரவா.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading தமிழ் வாழ்க! at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: