நிஜங்களும் நிழல்களும்

இங்கு வந்து பல நாட்களாகிவிட்டன. இதற்குள், பாரத பழம்பெரும் நாட்டில் பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. முதலில், எனக்கு நடந்தது,நான் மடிகணிணியில் சுகம் காண்கின்றேன். பழைய desktop ஒய்வு பெற்று விட்டது. எனக்குத்தான் 80+ ஓய்வில்லை. காலனைக் காலால் உதைக்க உழைத்துக் கொண்டே யிருக்க வேண்டும். இதைச் சொல்ல ஒரு நசிகேதஸ் தேவையில்லை.

பாரத பழம்பெரும் நாட்டு விவ்காரத்துக்கு வருவோம்.

அண்ணா ஹஸாரே காந்திஅடிகளின் மறு வருகையா? தொலைக் காட்சி ஊடகங்கள், குறிப்பாக, டைம்ஸ் நௌ, அவ்வாறு கூறியே கஜனாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றது.  லோக்பால் என்ற புதிய தாரக மந்திரம் பாரத நாட்டைப் பற்றியுள்ள அனைத்துச் சமூக, பொருளாதாரப் பிணிகளுக்கான சர்வரோக நிவாரணி என்பது  போல்  அசுரத்தனமான பிரச்சாரம் ஊட்கங்களில் நிகழ்ந்து வருகிறது. லஞ்சந்தான் இந்தியாவைப்பற்றிய வியாதியா? அல்லது லஞ்சம்   வியாதியின் அறிகுறியா என்பது பற்றி யாரும் ஆராய்வதாகத் தெரியவில்லை.

எப்பொழுது மமன்மோகன்சிங் என்ற  பொருளாதார மேதை, இந்தியாவை அமெரிக்காவாக ஆக்க முயன்றாரோ அப்பொழுதே தொத்து நோயை இறக்குமதி  செய்துவிட்டார். அன்று,நேருவின் அரைவேக்காட்டு  ஜனநாயக சோஷலிஸம்,  பர்மிட்-லைஸென்ஸ்-கோட்டா காமதேனு, அன்று இந்திய அதிகாரவர்க்கத்துக்கும் இந்திய முதளாளிகளுக்கும் சோறிட்டு, இந்திய ஏழை மக்களைப் பட்டினிப் போட்டு வியாதியாகப் பரவியதோ,  அது போல், இன்று  தாராளமயமாக்குதல் என்ற கொள்கை  அமெரிக்காவின்  முதளாளித்வ பினீகளை அனைத்தும் இந்தியாவில் குடியேற்றியிருக்கிறது. அமெரிக்காவின் Medicare  கொள்கைகளும் அமூலாக்கப்பட்டுவிட்டால், இந்தியா ஓர் ஏழையின் அமெரிக்காவாக மாறிவிடும்.இந்தப் பொருளாதாரக் கொள்கை உருவாக்கிய அசுரப் பசியுடைய நடுத்தர வகுப்பு கவந்தர்களுக்குத் திடீரென்று  லஞ்சதின்மீது கோபம் எகிறிவிட்டது.லஞ்சம் வியாதியின் அறிகுறியேயன்றி, வியாதியன்று.  இந்தியாவைப் பற்றியுள்ள வியாதி, பெரும்பான்மையோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றனர் என்பதுதான். ஹஸாரே அதைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? காந்தி அடிகளைப் போன்றவர்கள் ஓராயிரம் ஆண்டு  ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணி. ஹஸரேயை அவருடன் ஒப்பிடுவதுதான் தேசத் துரோகம்.

Advertisements

§ 5 Responses to நிஜங்களும் நிழல்களும்

 • Rameshkalyan says:

  கொஞ்சம் நியாயமான விஷயத்தைப் பேசி விட்டால் அவரை தெய்வநிலைக்கு உயர்த்துவதும் துதி பாடுவதும் நமக்கு ஏற்பட்டுவிட்ட சாபம். அரசர் காலத்தில் இருந்து ஆங்கிலேயர்கள் வழியாக இப்போது தொடர்கிறது. இதைவிட ஆச்சரியம் படித்தவரே ஹசாரே பாராளுமன்றத்தைவிட உயர்ந்தவர் என்ற கூற்று. இந்தியாவில்தான் எதுவும் நடக்கும். எதுவும் நடக்காது.

 • sir the anger when the right chord was touched by anna was rightly exploded the fact is only when the middleclass take things in their hands social changes are happening .for example independance of india and when the people who rule move away from the people and make themselves super rich the middleclass felt helpless and suffered by the poor and middleclass identified themselves with anna is understandable

 • nathikkarai says:

  இங்கே பிறந்து வளர்ந்து படித்து ,வேலைக்காக அயல் நாடு சென்று திரும்பியவன்
  கேட்கிறான் “என்னையா ரோடு இது ,டாக்ஸ் வாங்காரன்ல ரோடு கூட சரியாய் போட மாற்றான்”.
  வரி -ன்ற பேர்ல நாம கொடுக்கிற பணத்துக்கு நாம என்ன எதிர்பாக்கணும்னே நமக்கு தெரியலை.
  வந்தவன் திரும்பி போறான் ,காரணம் அவன் கொடுக்கிற வரிக்கு பதில் எதிர்பாக்குறான்.
  இப்டி எத்தனையோ பேர் ,கிளம்பிப் போறான் ,போறவன் பல பேர் கிட்ட வெதச்சுட்டு போனது-
  இந்த டாக்ஸ் விஷயம் .இது யார் மூலமா வந்த என்ன ? மக்கள் எல்லோரும் முட்டப்பயலுக இல்ல
  நீங்க கூட எழுதிக் காட்டி பிரபலம் ஆனதோடு சரி ,என்ன பண்ணலாம்

 • Anujith says:

  Please record your experiences with srirangam – (G)olden days……..

 • ponnambalam kalidass ashok says:

  today only , i have read ur page. simple language. strong view w/o any compromise. past , present & future , every view u have gone thro’. thank u , sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: