தமிழ் எழுத்தாளனா, இந்திய எழுத்தாளனா?

இப்பொழுது புத்தம் புதிய  மடிக்கணிணியில் எழுதுகிறேன்.

ஒரு பழைய அநுபவத்தைக் கலந்து கொள்ள விரும்புகின்றேன். காரணம், தற்கால இந்திய இலக்கியம் என்றால், இந்தோ-ஆங்கில நூல்கள், ஹிந்தி நூல்கள், வங்காள மொழி, மலையாள மொழி நூல்கள் என்றுதான் பரவலாக, சர்வ தேச அளவில் அறியப்படுகின்றனவே அன்றி, தற்காலத் தமிழநூல்களைப் பற்றியோ, இலக்கிய ஆசிரியர்களைப்  பற்றியோ  இலக்கியத் தளத்தில் யாருக்கும் ஒன்றும் தெரியாது. அயல்நாட்டுப் பல்கலைகழகங்களிலும், தமிழ் செவ்வியல் மொழியாகவே கற்பிக்கப் படுகின்றதே தவிர, தற்காலத் தமிழ் இலக்கிய நூல்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்லை. அங்குள்ள 1அயல்நாட்டு அறிஞர்களுக்கும், தமிழைப் பற்றி ஒரு archival, linguistic  ஈடுபாடு இருக்கின்றதேயன்றி, இக்காலத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய வேண்tடுமென்ற விருப்பம் இல்லை. காரணம், நாம்தான்.

தற்கால வங்காளமொழி இலக்கியம் பற்றிப் பேசுவதற்கென்று  இலக்கியம் அல்லாத பிற துறைகளில் உலகளவு அறிமுகமானவர்கள் அமர்த்தியா சென் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர் தாகூரைப் பற்றிப் பேசுகிறார், மாஸ்வேதாதேவியைப் பற்றிப் பேசுகிறார். காயத்திரி ஸ்பிவாக் என்கிற ஆங்கில இலக்கியப் பேராசிரியர் மகாஸ்வேததா தேவியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.  பிற துறை வல்லுநர்களான தமிழர்களுமறந்தும்க்குத் தமிழ் இலக்கியம் பற்றி அக்கறை கிடையாது.  காலனி ஆட்சி போது,  தமிழின் அறிவு ஜீவிகளுக்கு ஆங்கிலமும், சமஸ்கிருதமும் முக்கியமாக இருந்தனவே தவிர, தமிழ் மொழி இலக்கியங்களைப் பற்றி ஒனும் தெரியாது. நான் எழுதத் தொடங்கிய போது, நான் தில்லியில்ல் சந்தித்த தமிழ் அறிவு ஜீவிகள், என்னைச் சந்த்திக்கும்போது, ‘ உங்க article விகடனில் வந்திருக்கிறதா என் wife சொன்னா’ என்பார்களே தவிர மறந்தும் தமிழ் படிக்க மாட்டார்கள்.

பழைய  அநுபவத்தைச் சொல்ல மறந்து விட்டேன்.

கானடா வாங்கோவரில் அது நடந்தது. நான் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தேன். அப்பொழுது வாங்கோவருக்கு இந்தியாவிலிருந்து ஹிந்தி எழுத்தாளர்கள் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் வந்திருந்தார்கள். இந்தியத் துணைதூவரகம் அவர்களுக்கு விருந்து அளித்தது. பல்கலைக்கழகம் சென்றிருந்த என்னையும் அழைக்க வேண்டுமென்று தூதுவரகத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் இந்தியத் துணைக் கமிஷணருக்குச் சொல்லியிருக்கிறார். தூணைக் கமிஷணர் உத்தர பிர்தேசத்தைச் சேர்ந்தவர்.கானடிய எழுத்தாளர்களும் வந்திருந்தனர்.

துணைக் கமிஷணர் ஹிந்தி எழுத்தாளர்களை ‘ இவர்கள் எங்கள் இந்திய எழுத்தாளர்கள்’ என்று அறிமுகப்படுத்திவிட்டு, என்னை மறந்துவிட்டார். அதை அவருக்குத் தூதுவரகப் பணியாளர் ஒருவர்  நினைவூட்டினார்.  உடனே அவர்,’ ஐ ஆம் ஸாரி, இவர் எங்கள் தமிழ் எழுத்தாளர்’ என்று சொன்ன்னா என்னை அறிமுகப்படுத்தினார்.

“நான் இந்திய எழுத்தாளன் இல்லையா?’ என்று நான்  கேட்டேன்.

அவருக்குப் புரியவில்லை. ‘ஹிந்தி எழுத்தாளர்களை எங்கள் இந்திய எழுத்தாளர்கள் என்றீர்கள். என்னைத்  ‘தமிழ் எழுத்தாளர் ‘ என்றிர்கள். நான் இந்திய எழுத்தாளர் இல்லையா?’ என்று விளக்கினேன்.

இதற்குக் காரணங்கள் இரண்டு. இந்தியா என்றால் ஹிந்தி, ஹிந்தி என்றால் இந்தியா’ என்பதுதான் பெரும்பான்மையான ஹிந்தயைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுடைய அடிமனக் கருத்து இன்னொரு காரணம், பொதுவாகப் பெரும்பான்மையான தமிழர்கள் தங்களை அகில இந்திய கலாசார நீரோட்டத்தினின்றும் தங்களை அந்நியப் படுத்திக் கொள்வதைத் தமிழரின் கலாசாரப் பெருமையாக நினைக்கிறார்கள்.

அதனால்தான், தாகூரைக் காட்டிலும் இலக்கியச் சிறப்பில் எந்த அளவுக்கும் குறைவில்லாத பாரதி இந்தியாவிலும், சர்வ தேச அளவிலும் அறியப் பட வேண்டிய அளவுக்கு அறிமுகமாகவில்லை.  அறியப்பட வேண்டிய உண்மையான தமிழ் எழுத்தாளர்கள் இந்திய அளவில் கூட அறிமுகமாகவில்லை. இதற்கு அரசியல் காரணங்களும் உண்டு.

Advertisements

§ 8 Responses to தமிழ் எழுத்தாளனா, இந்திய எழுத்தாளனா?

 • vathsala says:

  It is very true.

 • santhanakrishnan says:

  is this the fault of tamil writers? or the political scenario when this hindi protest happenings creates this type of mind setup to the writers and everyone?

 • தமிழ்நாடு என்றிருப்பதால் தங்களை தமிழ் எழுத்தாளர் என்றும், இந்தி எழுத்தாளரை இந்திய எழுத்தாளர் என்றும் கூறியிருப்பார் போல! மேலும், தமிழாசிரியர்களே சங்க காலத்தை விட்டு சமகால இலக்கியத்தை வாசிக்காத போது மற்றவர்கள் எப்படி வாசிப்பார்கள்?
  பகிர்விற்கு நன்றி.

 • ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி says:

  ஹிந்தி படித்தால், பாரதியை இந்திய அளவில் அறிமுகப்படுத்தலாம். கவிதைகளை இந்தியில் மொழிமாற்றம் செய்து. தாகூரின் கவிதைகளை தமிழில் மாற்றி பிரபலமடையச் செய்ததைப்போல்..

 • Shikandi says:

  இங்கே இரண்டு கேள்விகள் எழுப்பி இருக்கிறீர்கள் – ஒன்று தமிழ் இந்திய மொழி என்ற கருத்து, மற்றொன்று தமிழுக்கு வாசகர்கள் கொடுக்கும் இலக்கிய முக்கியத்துவம். அரசியல் காரணங்கள் என்பது ஒரு தனிப்பட்ட காரணம் அல்ல. எழுத்தாளரின் சாதி, எழுதப்படும் கருத்து, எழுதப்படும் நடை என்று மூன்று கூராக இதை பார்க்கலாம். நம் கண் பார்வைக்கு தமிழ் இலக்கியம் பெரும் அங்கீகாரம் ஒரு ஒன்றுபட்ட முழுமையாக தெரியவில்லை என்பதே என கருத்து. உதாரணத்திற்கு, இன்றும் கல்கி, அசோகமித்திரன், அம்பை, சிவகாமி, பாமா என்று பல தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் வெவ்வேறு விதங்களில் தாங்கள் எதிர்பார்க்கும் அளவிலும் நிலையிலும் நிச்சியம் படிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன.

 • Sobana says:

  I’m sorry I’m writing this in English,but I don’t know how to enable this Tamil font here.
  Anyway Yes..I have seen this kind of indifferent attitude among Tamil people.And they brag about it, which is even worse.
  I don’t know about your time.But look at the plight of ours,the best selling Indian author is Chetan Bhagat and in Tamil its Ramani Chandran and the like …God help us … I wish I could go back in time..

 • தற்காலத்தில் மனதில் பட்டதைச் சொன்னால் புத்தகம் பிரசுரிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். சில கட்டமைக்கப்பட்ட தலைவர்கள் பறறியும் அவர்களது ‘கொள்கைகள்’ பற்றியும் எழுதினால் வசவு பொழிகிறது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் இந்த அளவு இல்லை என்று நினைக்கிறேன்.
  அத்துடன் நடிகையின் இடுப்பு பற்றிப் படம் போட்ட பத்திரிக்கைகளே விற்பனை ஆகின்றன. கடந்த 40 ஆண்டு வீழ்ச்சியின் பயன் என்று நினைக்கிறேன்.

 • ponnambalam kalidass ashok says:

  strong view by u, really 2 think. even now, this sort of problem persists in all fields. when fishermen caught n the middle of the sea , it s described as Tami fishermen never as Indian fishermen.where as in other fishermen’s case it s as Indian fishermen this attitude should change n media. thank u.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: